மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு: பழைய வாகன கழிவு கொட்டிய குப்பையில் பயங்கர தீ; 01 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறத்தில், சங்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இங்கு பழைய வாகனங்கள் உடைக்கப்பட்டு அதில் தேவையான பாகங்களை எடுத்து வைத்துக் கொண்டு மற்றவை விற்பனை செய்யப்படுகின்றன. 

அத்துடன், இங்கு  சேகரிக்கப்படும் வாகனங்களின் கழிவுகள் சங்கர் நகர் பகுதியில் உள்ள குப்பைகளில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் திடீரென கழிவு குப்பையில் இருந்து லேசாக புகை வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளது.

அங்கு காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவ தொடங்கியதில், குப்பையில், கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரெக்சின் பொருட்கள் எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. இதனால் காற்றும் மாசடைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் தலைமையில் இரு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீயினால் அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனாலும், இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீயினால்   அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrible fire in a dumpster filled with old vehicle waste in Mettupalayam


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->