விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ரகசிய நிச்சயதார்த்தம்!
vijay devarakonda rakshmika manthana
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஹைதராபாத்தில் அமைதியாக நடைபெற்றுள்ளது. விஜய்யின் வீட்டிலேயே நடந்த இந்த நிகழ்வில், இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று இரு குடும்பங்களும் தீர்மானித்துள்ளன. இந்த தகவல் தெலுங்கு ஊடகங்களில் பரவலாக வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
விஜய் – ராஷ்மிகா இருவரும் நீண்ட காலமாக காதல் வாழ்வில் இருந்ததாகவும், இதைத் தொடர்ந்து திருமண முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இணைந்த இவர்களின் ஜோடி அப்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இருவரின் நடிப்பும் அதிகம் பாராட்டப்பட்டு, முன்னணி நடிகர்களாக உயர்ந்தனர்.
குறிப்பாக, ராஷ்மிகா சமீப ஆண்டுகளில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கு திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக திகழ்கிறார்.
இருவரும் தங்களது பிஸியான பணிகளுக்கிடையே வெளிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. தற்போது நிச்சயதார்த்தம் மூலம் அந்த உறவு அதிகாரப்பூர்வமாக மாறியிருப்பதால், ரசிகர்கள் திருமண விழாவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
vijay devarakonda rakshmika manthana