வேற படமே எடுக்கல.. இதான் என் லட்சியம்! - துருவ நட்சத்திரம் ரிலீஸுக்காக ஜி.வி.எம் செய்த தியாகம்...!
He didnt make any other films This my ambition sacrifice GVM made release Dhruva Natchathiram
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் "துருவ நட்சத்திரம்", பல ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரத் தயாராகி வருகிறது. நிதி நெருக்கடிகள் எனும் முட்டுக்கட்டைகளால் இந்தப் படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், தற்போது ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

திரையுலகில் தனது கால் நூற்றாண்டு காலப் (25 ஆண்டுகள்) பயணத்தைக் கொண்டாடும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கௌதம் வாசுதேவ் மேனன், படத்தின் தற்போதைய நிலை குறித்து வெளிப்படையாகப் தெரிவித்ததாவது,"நிதிச் சிக்கல்கள் காரணமாகவே 'துருவ நட்சத்திரம்' முடங்கிக் கிடந்தது.
அந்தப் போராட்டங்களைச் சமாளிப்பதிலேயே சில ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது இறுதிக்கட்டச் சவால்களைக் கடந்து வருகிறேன். படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை இன்னும் இரண்டே வாரங்களில் அறிவிப்பேன் என நம்புகிறேன்.
இந்தப் படத்தை எப்படியாவது ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகவே, வேறு எந்தப் படங்களையும் இயக்காமல் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்களும், விறுவிறுப்பான டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மலைபோல் உயர்த்தியிருந்தன.
எனினும், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ரசிகர்களிடையே ஒருவித சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இப்போது இயக்குநரின் இந்த நேரடி அறிவிப்பு, 'ஜான்' (John) கதாபாத்திரத்தின் ஸ்டைலான வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர்களுக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளது.
English Summary
He didnt make any other films This my ambition sacrifice GVM made release Dhruva Natchathiram