பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடிய டொனால்டு டிரம்ப்
Donald Trump spoke with Prime Minister Modi over the phone
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசி மூலம் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து இந்தியா ககச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் அளவை குறைத்துக் கொள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால், வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''நான் பலமுறை கூறியது போல, அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை உண்மையாகவே ஒரு சிறந்த நண்பராகக் கருதுகிறார்! இன்று மாலை வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன! என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Donald Trump spoke with Prime Minister Modi over the phone