குதிரையில் திருமண ஊர்வலம் சென்றதால் ஆத்திரம்; தலித் மணமகன் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர்..!
An upper caste mob attacked a Dalit groom for riding a horse in his wedding procession
குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் சந்துர்மனா என்ற கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் விஷால் சாவ்தா என்பவரின் திருமண விழா இன்று (பிப்ரவரி 02) நடைபெற்றுள்ளது.
அப்போது மணமகன் விஷால் சாவ்தா தனது திருமண ஊர்வலத்தின் போது குதிரை மீது அமர்ந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர் ,மணமகனின் ஊர்வலத்தை வழிமறித்துள்ளனர். பின்னர், ஒரு தலித் எப்படி எப்படிக் குதிரை சவாரி செய்யலாம்? என்று கூறி மணமகனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கும்பல் மணமகனை வலுக்கட்டாயமாக குதிரையிலிருந்து கீழே இழுத்து போட்டுள்ளனர். அதனை தடுக்க வந்த உறவினர்களை கத்திகள் மற்றும் கட்டைகளால் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிலர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின் மணமகன் குதிரை சவாரியை கைவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று திருமண சடங்குகளில் கலந்துகொண்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
மணமகன் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சைலேஷ் தாகூர், ஜெயேஷ் தாகூர், சமீர் தாகூர், அஸ்வின் தாகூர் ஆகிய 04 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த கிராமத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன், காந்திநகர் முதல் பனஸ்கந்தா வரை குஜராத்தில் தலித் மணமகன்கள் குதிரை சவாரி செய்வதால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
An upper caste mob attacked a Dalit groom for riding a horse in his wedding procession