அகமதாபாத் விமான விபத்துக்கு காரணமாக அதே கோளாறு; பெரும் விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்; பதைபதைத்து போன பெங்களூரு விமான நிலையம்..! - Seithipunal
Seithipunal


லண்டனிலிருந்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் இன்று மாலை பெங்களூரில் தரைறயிறங்கியுள்ளது. அடுத்த பயணத்திற்கு குறித்த விமானம் சிறித நேரம் கழித்து புறப்பட தயாராகியுள்ளது.

அப்போது, அந்த விமானத்தில், எதிர்பாராத விதமாக, எரிபொருள் சுவிட்ச் தானாகவே 'Run' நிலையில் இருந்து 'Cut-off' நிலைக்கு மாறியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அந்தச் சுவிட்ச் தானாகவே 'Cut-off' நிலைக்குச் சென்றதால், எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருந்துள்ளது.  உடனடியாக இந்த தொழிநுட்ப கோளாறு கண்டறியப்பட்டவுடன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் குறித்த விமானம் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டது ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அன்று அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, விடுதி ஒன்றின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் பயணித்தவர்கள் உள்ளிட்ட 260 பேர் பரிதமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், அந்த விபத்திற்கும் இந்த மாதிரியான எரிபொருள் சுவிட்ச் கோளாறுதான் முக்கியக் காரணமாகக் கண்டறியப்பட்டது. அகமதாபாத் விபத்திற்குப் பின்னர்,  அனைத்து ஏர் இந்தியா போயிங் 787 விமானங்களையும் பரிசோதனை செய்திருந்தது. இருப்பினும், தற்போது மீண்டும் அதே போன்றதொரு தொழில்நுட்ப கோளாறு ஒரு விமானத்தில் கண்டறியப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The same defect that caused the Ahmedabad plane crash was discovered in an Air India flight scheduled to depart from Bengaluru


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->