'நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை; எங்களுடைய அரசு உணர்வுப்பூர்வமானது'; பாஜவின் குற்றச்சாட்டுக்கு சித்தராமையா பதில்..!
Siddaramaiah responds to BJPs accusation saying he is not an incompetent Chief Minister
கர்நாடக மாநில சட்டசபையில் அம்மாநில முதல்வர் சித்தராமையா ஆட்சி குறித்து எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையா பதில் அளித்து கூறியுள்ளதாவது:
தனது இலக்கை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், என்னுடைய அரசு, அதற்கான திசையை இழக்கவும் இல்லை என்றும், மோசமானதும் இல்லை என்று பதில் கூறியுள்ளார். மேலும், நான் பயனற்ற முதலமைச்சர் இல்லை. நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எங்களுடைய அரசு உணர்வுப்பூர்வமானது. முன்னதாக இருந்த பாஜக அரசு உணர்வுப்பூர்வமற்றது என்று பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, அன்னபாக்கிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை எடியூரப்பா குறைத்தாகவும், விவசாயிகள் உரங்களை கேட்டபோது, துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்குக்கூட சென்றனர் என்று பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும், பாஜக அரசு நலத்திட்டம் தொடர்பாக திட்டங்களை நிறுத்தியதாவும், பாஜக அரசால் தான் திட்டங்கள் நிறுத்தப்பட்டன என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், நாங்கள் மனிதாபிமான, உணர்வுப்பூர்வமான அணுகுமுறையை கடைபிடிக்கிறோம். கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் குறைப்பாட்டால் சமராஜாநகரில் 36 பேர் உயிரிழந்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், பாஜக அரசு 03 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்தது. இதுதான் உங்கள் உணர்ச்சிவசப்படும் தன்மையா? என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Siddaramaiah responds to BJPs accusation saying he is not an incompetent Chief Minister