நேபாளத்தில் கனமழை: அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்கிறார் பிரதமர் மோடி..!
PM Modi says ready to provide all assistance to Nepal
நேபாளத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், சாலைகள் பெரிதும் சேதம் அடைந்துள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் மண்ணில் புதையுண்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
'நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் சேதம் வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் நேபாள மக்களுடனும், அரசாங்கத்துடனும் நாங்கள் துணை நிற்கிறோம். நட்பு அடிப்படையில் அண்டை நாடான நேபாளத்திற்கு தேவைப்படும் எந்த ஒரு உதவியும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது.' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
English Summary
PM Modi says ready to provide all assistance to Nepal