துர்கா பூஜையில் அத்துமீறிய பாதுகாவலர்: ஆக்ரோஷமான நடிகை கஜோல்..!
Actress Kajol gets aggressive after security guard trespasses during Durga Puja
பிரபல பாலிவுட் மற்றும் தமிழ் நடிகை கஜோல். மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஆண்டுதோறும் நடைபெறும் துர்கா பூஜை கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது வருகிறார். இந்நிலையில், ஒரு விழாவில் நடிகை கஜோல் கால் தடுமாறியபோது, பாதுகாவலர் ஒருவர் அவரை தாங்கி பிடித்துள்ளார். அப்போது அவர் பிடித்த விதம் இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கூடியிருந்த இந்த விழாவில், கஜோல் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்தபோது அவரது பாதுகாவலர் உடனடியாக அவரைப் பிடித்துள்ளார். அப்போது கஜோல் பாதுகாவலரை முறைத்து கடும் கோபமாக பார்ப்பது போன்ற காணொலி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த சிலர், அவர் கஜோலை தவறான முறையில் பிடித்ததாகவும், கூட்டத்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர். எனினும், வேறு சிலரோ, கஜோல் கீழே விழுந்துவிடாமல் தடுப்பதற்காகவே பாதுகாவலர் அவ்வாறு வேகமாகச் செயல்பட்டதாகவும், அதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Actress Kajol gets aggressive after security guard trespasses during Durga Puja