'காங்கிரஸ் இந்தியா பக்கம் இல்லாமல் எதிரிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது': பாஜ குற்றச்சாட்டு..!
BJP accuses Congress of supporting enemies instead of being on Indias side
பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் பாஜகவை குற்றம் சுமத்தியிருந்தார். இந்த குற்றச்சாட்டை பாஜ திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, காங்கிரஸ் எதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
மீடியாக்களில் வெளியான தகவலை வைத்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: '' இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்கு சீன வழங்கிய போர் விமானங்களுக்கு இன்ஜீன்களை சப்ளை செய்வது ஏன்..? '' என கேட்டு இருந்தார்.
இது தொடர்பாக பாஜவின் அமித் மாளவியா குறிப்பிடுகையில், இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ள தகவலை மேற்கோள் காட்டியதுடன், அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை என்றும், உறுதியான தகவல் இல்லை எனவும், காங்கிரஸ் எம்பி இந்தியாவுடன் நிற்பதற்கு பதிலாக எதிரியின் பக்கம் சாய்வதை தேர்வு செய்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
BJP accuses Congress of supporting enemies instead of being on Indias side