நடிகர் சுதீப் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு இந்திய ராணுவம் குறித்து பாராட்டு...!
Actor Sudeep praises Indian Army in letter to Prime Minister Modi
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் 'சுதீப்'. இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சுதீப்:
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது,"எனது தாயின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்து நீங்கள் எழுதிய கடிதத்திற்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது தாயின் பிள்ளையாக இல்லாமல், இந்த நாட்டின் பெருமை மிகு குடிமகனாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இது ஒரு வாழ்த்தாக இல்லாமல், 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றி இந்த உலகத்திற்கே நாம் அளித்துள்ள ஒரு பாடமாகும்.
நாம் எதற்காகவும் பின்வாங்க மாட்டோம், நாம் யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்பதை தெரிவித்துள்ளோம்.போருக்கு வழிகாட்டுதல்களையும், திடமான முடிவை எடுக்கும் ஒரு தலைவரையும் நாங்கள் பார்த்துள்ளோம்.
உங்களுடன் கன்னடர்களும், கன்னட திரையுலகமும் எப்போதும் உறுதுணையாக நிற்போம். உங்களது தலைமையில் நமது ராணுவம் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. இது நமது பெருமை ஆகும். நாம் அனைவரும் ஒரு மக்கள், ஒரு குரல், ஒரு நாடாக ஒன்றிணைந்து நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Actor Sudeep praises Indian Army in letter to Prime Minister Modi