கருணாநிதி என்ன கிழித்தார்? தமிழினத் துரோகி... திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக!
ADMk Condemn to DMk MK Stalin karunanithi
அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்கள் நீக்கி, மாற்றுப் பெயர் வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் எடுத்துக்காட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
பசும்பொன்னார், தீரன் சின்னமலை, இரட்டைமலை சீனிவாசன், வ.உ. சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன், ம.பொ. சிவஞானம் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியவர்கள் இல்லையா? சாலைகளுக்கு அத்தகைய தலைவர்கள் பெயரை வைக்காமல், தமிழ்நாட்டை பாழ்படுத்திய கருணாநிதியின் அடைமொழியைத் தான் சாலைகளுக்கு சூட்ட வேண்டுமா?
26 ஆண்டுகள் நம் தமிழகத்தில் ஆட்சி புரிந்து, பொற்கால ஆட்சி வழங்கி, மக்கள் மனதில் இன்றும் என்றும் வாழும் நம் இருபெரும் தலைவர்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆகியோர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை விட கருணாநிதி என்ன கிழித்தார்?
தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் தாரை வார்த்துவிட்டு, இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த தமிழினத் துரோகியின் பெயரை சாலைக்கு சூட்டி, தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் தலைவர்களைப் புறக்கணிக்கும் திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே சாலைகளுக்கு உள்ள தலைவர்களின் பெயரை இந்த அரசாணையை சாக்காகக் கொண்டு நீக்க முயற்சித்தால், தமிழக மக்களின் கடும் எதிர்ப்புக்கும் கொந்தளிப்புக்கும் இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு ஆளாக நேரிடும் என்பதை நினைவிற்கொள்ள விழைகிறோம்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் உழைத்த அத்தனை தலைவர்களுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து, இப்பட்டியலில் அவர்களை இணைத்து மறு அரசாணை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMk Condemn to DMk MK Stalin karunanithi