மதுபோதையில் ரகளை - ஜெயிலர் பட வில்லன் நடிகர் கைது..!!
villain actor vinayagan arrested
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
எர்ணாகுளத்தில் வசித்து வரும் நடிகர் விநாயகன் சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் சண்டையிட்ட சம்பவத்தில் காவலர்களிடம் ரகளை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். பின்னர் கோவாவில் தேநீர் கடைக்கு முன்பு குடித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைக் கடுமையாக திட்டியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நடிகர் விநாயகன் மீதான மதிப்பைக் கெடுத்ததையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு நடிகர் விநாயகன் தனது முகநூலில் பதிவிட்டார். இந்த நிலையில், நடிகர் விநாயகன் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகே பிரபல இயக்குனர் இயக்கத்தில் நடைபெற்று வரும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அதன் படி நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்து, நடிகர் விநாயகன் கொல்லத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அங்கு மது அருந்தி விட்டு ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார், விநாயகனை விசாரணைக்காக கொல்லம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
villain actor vinayagan arrested