எல்லையில் வீர மரணமடைந்த தந்தை: 'தானும் ராணுவ வீரராக உருவாகி, தந்தை மரணத்திற்கு பழிவாங்குவேன்': மகள் ஆவேசம்..!
Father who died a heroic death on the border I will become a soldier myself and avenge my father death Daughter obsession
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, கடந்த 06-ந்தேதி இரவில் இந்திய ராணுவம் தாக்குதலை நடத்தியது. எனினும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தி கொள்வது என முடிவு செய்து, நேற்று மாலை 05 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனை மத்திய அரசும் உறுதி செய்தது. ஆனால், போர் நிறுத்தத்திற்கு பின்பும் இரவில், பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதால், இந்திய ஆயுத படைகளும் எதிர் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்த காஷ்மீரின், ஆர்.எஸ். புரா பிரிவில் பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர் சுரேந்திரா மொகா என்பவரும் இருந்துள்ளார். அவர் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, பாகிஸ்தானின் எறிகுண்டு தாக்குதலில் சிக்கி பலியானார்.

இதனையடுத்து, ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் உள்ள மாண்டவா என்ற சொந்த கிராமத்திற்கு வீர மரணமடைந்த சுரேந்திரா மொகாவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன், ராணுவ வாகனத்தில் அவருடைய உடல் மீது மூவர்ண கொடி போர்த்தப்பட்டு கொண்டு சேர்க்கப்பட்டது.
எல்லையில் வீர மரணமடைந்த வீரர் சுரேந்திரா மொகாவின் மகள் வர்திகா அவருடைய மரணம் பற்றி நிருபர்களிடம் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- 'எதிரிகளை துவம்சம் செய்து, நாட்டை பாதுகாக்கும்போது, என்னுடை தந்தை வீர மரணம் அடைந்ததற்காக நான் பெருமையாக உணர்கிறேன்.' என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடைசியாக நேற்றிரவு 09 மணியளவில் அவர்கள் தந்தையுடன் பேசியதாகவும், அப்போது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தாக்கவில்லை என தந்தை கூறியதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வர்திகா பேசும் போது , ஒட்டு மொத்தத்தில் பாகிஸ்தானை முடித்து விட வேண்டும் என்றும், தன்னுடைய தந்தை போன்று தானும் ராணுவ வீரராக விரும்புவதாகவும், அவருடைய மரணத்திற்கு பழிவாங்க தான் விரும்புகிறேன் என்றும், ஒவ்வொருவராக அவர்களை நான் முடித்து விடுவேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
Father who died a heroic death on the border I will become a soldier myself and avenge my father death Daughter obsession