குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி காலமானார்..! 
                                    
                                    
                                   Character and comedy actor Super Good Subramani has passed away
 
                                 
                               
                                
                                      
                                            தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி இன்று காலமாகியுள்ளார். புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் பிசாசு, ரஜினி முருகன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை 'சூப்பர் குட் சுப்பிரமணி' என்று அழைக்கப்பட்டார்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்ததோடு, மேலும் சில நடிகர்கள் நிதியுதவியும் செய்துள்ளனர்.
அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       Character and comedy actor Super Good Subramani has passed away