திருத்தணி கொடூரம்: "இளைய தலைமுறையை நேர்படுத்த வேண்டும்" - இயக்குநர் மாரி செல்வராஜ் ஆவேசம்!
Director Mari Selvaraj condemn to thiruthani attack
சென்னை - திருத்தணி மின்சார ரயிலில் 'ரீல்ஸ்' எடுக்கத் தடுத்த மகாராஷ்டிர இளைஞரை, 4 சிறுவர்கள் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைதான அந்த நான்கு சிறுவர்களும் கஞ்சா போதையில் இந்த அரக்கத்தனமான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மாரி செல்வராஜின் உணர்ச்சிகரமான பதிவு:
இச்சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது 'X' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இத்தாக்குதல் தமக்கு மட்டற்ற மன உளைச்சலையும் பேரதிர்ச்சியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு அவர் முன்வைத்துள்ள முக்கியக் கோரிக்கைகள்:
போதை கலாச்சாரம்: இளைய தலைமுறையைச் சீரழிக்கும் கொடூரமான போதைப் பொருள் கலாச்சாரத்தின் மீது அரசு பாரபட்சமற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக வலைதளச் சீரழிவு: சோஷியல் மீடியா வழியாக உருவாக்கப்படும் சாதி, மத மற்றும் 'தாதாயிச' தனிநபர் பெருமை பேசும் கோமாளித்தனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
நெறிப்படுத்துதல்: மானுட சமூகத்தின் மதிப்பையும், மனித வாழ்வின் இலக்கையும் புரியாமல் தடம் புரண்டு அலையும் இளைஞர்களை நேர்படுத்தி, அடுத்த தலைமுறையை அரசு பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Director Mari Selvaraj condemn to thiruthani attack