ஜேசன் சஞ்சய் வெல்வாரா மாட்டாரா?..ஜேசன் சஞ்சய் பாட்டி என்ன சொல்லி இருக்காங்க பாருங்க! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், விஜய்யின் சித்தியும் நடிகர் விக்ராந்த்தின் தாயுமான ஷீலா, ஜேசன் குறித்து பேசிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

போக்கிரி, வேட்டைக்காரன் படங்களின் பாடல் காட்சிகளில் சிறுவயதில் சில நொடிகள் தோன்றிய ஜேசன், நடிகராக வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடிப்பில் ஆர்வம் காட்டாமல், இயக்கத்தில் கவனம் செலுத்திய அவர், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை முடித்து, அங்கேயே குறும்படங்களை இயக்கி கவனம் பெற்றார். படிப்பை முடித்த பின் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக இயக்குநராக அறிமுகமாக முடிவு செய்தார்.

அவர் சொன்ன கதை லைகா நிறுவனத்திற்கு பிடித்துப்போக, ஜேசனை இயக்குநராக அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஹீரோ தேர்வு சிரமமாக இருந்தாலும், இறுதியில் சந்தீப் கிஷன் கதையை ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் தம்பி ராமைய்யா, ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலரும் இணைந்தனர். இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ‘சிக்மா’ என பெயர் வைக்கப்பட்டது. வெளிநாடுகளில் சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது படம் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜேசன் குறித்து ஷீலா அளித்த பேட்டியில், “பிள்ளைகளைவிட அவர்களுடைய பிள்ளைகள்தான் அதிக சந்தோஷம் தருவார்கள். என் பேரன் ஜேசன் கண்டிப்பாக வெல்வார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே ரத்தம், அதே ஜீன் அவருக்குள்ளும் இருக்கிறது. இளைய தளபதிக்கு கொடுத்த வரவேற்பை ரசிகர்கள் ஜேசனுக்கும் கொடுப்பார்கள். அவர் தன் பாதையில் நிச்சயம் ஜெயிப்பார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஷீலாவின் இந்த பேச்சு, ‘சிக்மா’ படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Jason Sanjay win or not Look what Jason Sanjay grandmother has to say


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->