"கருணாநிதி தலித் மக்களை இழிவுபடுத்தி விட்டார்" என்றவர் திருமாவளவன் - இடும்பாவனம் பதிலடி!
ntk idumbavanam vck thirumavalavan dmk karunanithi
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "2001ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விசிக அங்கம் வகித்தது.
உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் பாஜகவின் வாக்குகளையும் பெற்றுதான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
அந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை 2 1/2 ஆண்டுக்காலத்தில் ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறுகிறார் திருமா.
2004ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்தது. அதில் கடலூர் பாராளுமன்றத் தொகுதியைக் கேட்டார் திருமா. திமுக தர மறுத்ததால்,பிப்ரவரி மாதம் கூட்டணியைவிட்டு வெளியேறி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இத்தோடு, "கருணாநிதி தலித் மக்களை இழிவுபடுத்தி விட்டார்" என்றும் குற்றஞ்சாட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ntk idumbavanam vck thirumavalavan dmk karunanithi