ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்ச நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான உயர் பதவிகளை வழங்கி தமிழ்நாடு அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. 

ஆனால், இந்த பதவி உயர்வு நடைமுறைகள் உரிய விதிகளுக்கு முரணாக இருப்பதாக கூறி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

அவருடைய மனுவில் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் , இந்த விவகாரத்தை இந்திய அரசியல் சட்டம் 32-இன் கீழ் நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளதோடு, மனுதாரர் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகி ரிட் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தியதோடு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court dismisses petition seeking stay on Tamil Nadu governments order promoting IAS officers


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->