தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வு முடிவு...! - நாளை முதல் மாணவர்களுக்கு நீண்ட கோடை விடுமுறை...!
Early exam results due elections Long summer vacation students from tomorrow
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கல்வி அட்டவணையில் மாற்றம் செய்து இந்த ஆண்டுக்கான பள்ளி தேர்வுகள் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி, இன்று மாலையுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. சுமார் 45 நாட்கள் நீடிக்கும் இந்த நீண்ட விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் தேர்வுகள் முன்னதாகவே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், கல்வி நடவடிக்கைகள் சீராக நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Early exam results due elections Long summer vacation students from tomorrow