40 நாட்கள் ஆட்சி...100 மடங்கு வேகம்! '40 நாளில் நாங்க செஞ்சது இதுதான்'...!அடுக்கடுக்கான சாதனைகளால் அவையை அதிரவைத்த முதல்வர் விஜய்... திணறிய எதிர்க்கட்சிகள்...! - Seithipunal
Seithipunal


ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 40 நாட்களிலேயே பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் விரிவாக பட்டியலிட்டு விளக்கமளித்தார்.தமிழ்நாடு சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின்போது அவர் பேசியதாவது,"நாம் ஆட்சிக்கு வந்து இன்னும் 40 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக என்ன சாதித்தீர்கள் என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்காக நாம் செய்த பணிகளின் ஒரு பகுதியை பட்டியலிடுகிறேன்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள்
பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த ‘சிங்கப்பெண் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது.200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.134 கோடியே 83 லட்சம் மதிப்பில் சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடல் மற்றும் மக்கள் நலன்
வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றியவர்களுக்கு மாற்று பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.பராமரிப்பின்றி இருந்த அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நிர்வாக சீர்திருத்தங்கள்

பத்திரப்பதிவு துறையில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகையில்லா ஆவணப்பதிவு முறை விரைவில் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மின்னணு முறைக்கு மாற்றும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம் மற்றும் குடிநீர் திட்டங்கள்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த 40 புதிய வாகனங்கள் மருத்துவத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன.கூட்டுறவு வங்கிகளில் ஏழை, எளிய மக்கள் பெற்ற கடன்களில் முதல் கட்டமாக ரூ.2,045 கோடி தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2.0 வடிவில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.18,500 கோடி மதிப்பிலான மைய விரிவாக்க திட்டத்திற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கோவையில் மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்திக்கான புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் எல் அன்ட் டி கப்பல் கட்டும் தள விரிவாக்கத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஊழலற்ற தமிழ்நாடு
சட்டவிரோத கல்குவாரிகள் மற்றும் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும் செயல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.கனிம வள கண்காணிப்பு, எல்லை மேலாண்மை மற்றும் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்வது உள்ளிட்ட நவீன கண்காணிப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அனைத்து துறைகளிலும் அதிகார தலையீடு இல்லாத, லஞ்ச லாவண்யமற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவை அனைத்தும் வெறும் தொடக்கக்கட்ட சாதனைகள் மட்டுமே. 40 நாட்களில் இவ்வளவு செய்ய முடிந்திருக்கிறது என்றால், இனி வரும் நாட்களில் படிப்படியாக மேலும் பல மாற்றங்களை கொண்டு வர முடியும்.லஞ்சமற்ற, ஊழலற்ற, பெண்களுக்கு பாதுகாப்பான, சுதந்திரமான, வெளிப்படையான தமிழ்நாட்டை நமது மக்களுக்கு வழங்குவதே எங்களின் ஒரே இலக்கு. 8 கோடி தமிழக மக்கள் நம்முடன் இருக்கும் போது இந்த இலக்கை நிச்சயம் அடைவோம்' என முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

40 days Chief Minister Vijay shocked assembly his impressive achievements Opposition parties overwhelmed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->