பிரேக்கிங் நியூஸ் ...! 'ஒரு ஆபீஸ் கூட இல்லாமல் இயங்கும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன்'...! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடிப் பேச்சு...!
Tamil Nadu Olympic Association operating without even office Minister Adhav Arjuna dramatic speech
சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஒலிம்பிக் தரத்திலான வசதிகள், புதிய கட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு வளர்ச்சி தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்கு இதுவரை தனிப்பட்ட அலுவலக வசதி கூட இல்லாத நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டிய அவசியமான சூழல். கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒலிம்பிக் பவன் அமைக்கப்பட்டு முழுமையான செயல்பாட்டில் உள்ளது.
அதுபோன்று தமிழ்நாட்டிலும் ஒலிம்பிக் அசோசியேஷனுக்கென நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகத்தை அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் கலைஞர் பன்னாட்டு மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளில் சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எதிர்காலத்தில் சினிமா நிகழ்ச்சிகள், வணிகக் கண்காட்சிகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகள் அங்கு நடத்தப்படும்.
இதன் மூலம் விளையாட்டு மைதானங்கள் இனி முழுமையாக விளையாட்டு போட்டிகள், வீரர்களின் பயிற்சிகள் மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷனுக்காக அரசு சார்பில் இதுவரை தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. ஒலிம்பிக் தரத்திலான கட்டமைப்புகளுக்கான முதலீடுகளும் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையை மாற்றும் நோக்கில் விளையாட்டுத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் விரிவான மறுஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன".இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
English Summary
Tamil Nadu Olympic Association operating without even office Minister Adhav Arjuna dramatic speech