'காலத்தால் அழியாத காவிய நாயகர்'...! - கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாளில் நயினார் நாகேந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு...! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி உருக்கமான நினைவஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழின் உணர்வுகளுக்கு உயிரூட்டிய கவிஞரும், மனித வாழ்வின் ஆழமான தத்துவங்களை எளிமையான சொற்களில் மக்களின் மனங்களில் பதித்த மகத்தான படைப்பாளியுமான கவியரசர் கண்ணதாசனை அவரது பிறந்தநாளில் ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறோம்.

அவரது வரிகள் வெறும் பாடல் வரிகளாக மட்டும் இல்லாமல், வாழ்க்கையை புரிந்துகொள்ளும் ஞானச் சாளரங்களாகவும், மனித மனதை வழிநடத்தும் ஒளிவிளக்குகளாகவும் திகழ்கின்றன.

காதல், நட்பு, பக்தி, தத்துவம் என மனித உணர்வுகளின் ஒவ்வொரு பரிமாணத்தையும் கவிதைகளால் செதுக்கி, தமிழுக்கு அழியாத இலக்கியச் செல்வங்களை வழங்கியவர் கண்ணதாசன்.

காலங்கள் கடந்தாலும் அவரது படைப்புகள் தலைமுறைகள் தாண்டி மனித மனங்களைத் தொட்டு, புதிய சிந்தனைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன " என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An epic hero immortalized by time Nayinar Nagendran resilient post birthday Kaviyarasar Kannadasan


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->