ஒருதலைக் காதலால் விபரீதம்; திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர்; இளம் பெண் தற்கொலை..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான  கோமலி, அதே பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லரின் உரிமையாளரின் மகனான நிகில்ரெட்டியுடன் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன் பின்னர் கோமலி, நிகில்ரெட்டியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனையடுத்து கடந்த 2024-ஆம் ஆண்டு நிகில்ரெட்டிக்கு ஐதராபாத், சித்ரபுரி காலனியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. 

இதனால் அவர் சித்ரபுரி பகுதியில் உள்ள தன்னுடன் பணிபுரியும் நண்பர்களுடன் தங்கியுள்ளார். கோமலிக்கு ஐதராபாத்தில் உள்ள மல்லரெட்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்ததால் அவரும் ஐதராபாத் பாலநகரில் தங்கி படித்து வந்துள்ளார்.

கடந்தாண்டு கோமலி பாலநகரில் இருந்து, சித்ரபுரி காலனிக்கு குடி பெயர்ந்து, தனது செல்போனில் வீடியோ எடுத்து யூ டியூப்பில் பதிவிட்டு வந்துள்ளார். இதனால் அவர் அதிக ரசிகர்களை பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 06 மாதங்களுக்கு முன் கோமலி, நிகில்ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் நாம் நண்பர்களாகத்தானே பழகினோம் என்று கூறி மறுத்துள்ளார்.

அதன் பின்னர், நிகில்ரெட்டி அம்மாவிடம் கோமலி தனது காதலை தெரிவித்து, நிகில் ரெட்டியை திருமணம் செய்து வைக்கும் படி தெரிவித்துள்ளார். அதற்கு அவர் நிகிலுக்கு விருப்பம் இல்லாதபோது, நான் என்ன முடியும் என்று கூறியுள்ளார். 

இதனால் மனமுடைந்து போன கோமாலி, கடந்த 21-ஆம் தேதி மீண்டும் நிகில்ரெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அப்போதும் நிகில்ரெட்டி மறுத்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த கோமலி கடந்த 23-ஆம் தேதி இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில், துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கோமலி தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது  அவர் தனது காதல் குறித்து ஒரு டைரியில் ஏழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female YouTuber commits suicide after boyfriend rejects marriage proposal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->