தேடப்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாதியை பீஹாரில் கைது செய்துள்ள என்.ஐ.ஏ..!
NIA has arrested a wanted Khalistan terrorist in Bihar
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புடன் தொடர்புடைய பப்பர் கல்சா பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அமைப்பு இன்று கைது செய்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசாருடன் ஒருங்கிணைந்து, பீகாரின் மோதிஹாரியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங் கல்வாடியை கைது செய்ததாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
குறித்த பயங்கரவாதி நாபா சிறையில் இருந்து தப்பியதிலிருந்து, காஷ்மீர் சிங் ரிண்டா உட்பட காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்துள்ளதால், இவன் மீது மேற்கொண்டு தீவிர விசாரணை நடந்து வருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
NIA has arrested a wanted Khalistan terrorist in Bihar