என்னடா கடைசி நேரத்துல பெங்களூரு அணிக்கு வந்த சோதனை..? முக்கிய வீரர் விலகல்..?
Key player to leave Bengaluru for next IPL match
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்தது.
இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 04 நாட்களாக நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 05 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.ஆக பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு அணி அடுத்த போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் படிதார் காயம் காரணமாக விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா செயல்பட செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Key player to leave Bengaluru for next IPL match