16 வயது மாணவியை திருமண ஆசை காட்டி பலாத்காரம்: கர்ப்பமான சிறுமி: தலைமறைவான சக மாணவன்..!
16 year old student pregnant fellow student absconding
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, பிளஸ்-2 முடித்துளார். தற்போது அப்பகுதியில் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி மிகவும் சோர்வுடனும், வயிற்று வலியாலும் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் குறித்த மாணவியின் தாயார் ஆசாரிப்பள்ளதில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை மருத்துவர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாணவி கர்ப்பமாக இருப்பது மருத்துவர் சொன்னதை கேட்ட தாயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன் பின், மக்களிடம் நடந்த விவரங்கங்களை கேட்டறிந்துள்ளார். அதாவது சகமாணவனின் வீட்டுக்கு நோட்டு, புத்தகங்கள் கொடுப்பதற்காக சென்ற போது, வீட்டுக்குள் தனியாக இருந்த மாணவன், தன்னிடம் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறி கதறி அழுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவன் மீது புகாரளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
English Summary
16 year old student pregnant fellow student absconding