உலக கோப்பை போட்டியில் விளையாட ஆர்வம்! ஆசைப்படும் முன்னாள் கேப்டன்! - Seithipunal
Seithipunal


12-வது பெண்கள் 50 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகரிப்பால் பெண்கள் உலக கோப்பை போட்டியை 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தள்ளிவைப்பதாக ஐ.சி.சி இரு தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த அறிவிப்பை சுட்டிகாட்டி ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையும், வர்ணனையாளருமான லிசா தனது டுவிட்டர் பக்கத்தில், ''வரும் ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை போட்டிக்கு பின் ஓய்வு பெற திட்டமிட்டு இருந்த இந்திய வீராங்கனைகள் மிதாலிராஜ், ஜூலன் கோஸ்வாமி மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோர் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்" என்று தெரிவித்து இருந்தார்.

லிசாவின் இந்த பதிவுக்கு, இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ், "2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக உள்ளேன்" என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளளார்.

மேலும், மிதாலி ராஜ் அந்த பதிவில், "நிச்சயமாக உலக கோப்பை மீது எனது கவனம் இருக்கிறது. எனக்கு ஏற்பட்ட எல்லா வகையான சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு முன்பை விட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடனும், வலுவாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்து இருப்பது அவரின் ரசிகர்கள் பட்டாளத்தை உற்சாக படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mithali raj tweet about world cup


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->