2026 கேரளா சட்டமன்றத் தேர்தல்; முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்..!
Congress Releases First List of Candidates for the 2026 Kerala Assembly Elections
தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது.
கேரளாவில் வரும் 09ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரி, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நேற்று (16ஆம் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. வேட்பாளர்கள் வரும் 23-ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மாநில அளவில் எதிர் திசையில் இருந்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிரெதிர் திசையில் இருக்கின்றன.
இந்த சொல்லலில் 2026 சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வந்த நிலையில், 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சிபிஎம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, பாஜக, 47 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 55 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, 55 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
English Summary
Congress Releases First List of Candidates for the 2026 Kerala Assembly Elections