துபாய் மன்னரின் இளைய சகோதரர் மரணம்; 10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
Younger brother of the Ruler of Dubai passes away
சவூதி அரேபியா, ஓமன், புருனே, போன்ற நாடுகளில், மன்னராட்சி நடைமுறை உள்ளது. மன்னர் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்துவிட்டால், அந்த நாடுகளில், துக்கம் அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னரின் சகோதரர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமதுவின் இளைய சகோதரர்தான் ஷேக் அகமது மக்தூம். துபாய் காவல் மற்றும் பொது பாதுகாப்புத் துறையின் துணை தலைவராகப் பதவி வகித்து வந்த ஷேக் அகமது, இன்று (செப்.21) காலை உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஷேக் அகமதுவின் இறப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், நாட்டில் உள்ள அனைத்து தேசியக் கொடிகளும், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துபாய் மன்னர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், 'எனது சகோதரர் மீது இறைவன் கருணை காட்டட்டும். இறைவன் அவர் மீது கருணையை பொழிவான். அவர் இப்போது சர்வ வல்லமையுள்ள இறைவனின் மடியில் இருக்கிறார். அவர் எங்கள் பார்வையைவிட்டு மறைந்து விட்டாலும், எங்கள் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஷேக் அகமது இறப்புக்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை குறிப்பிடப்படவில்லை.
English Summary
Younger brother of the Ruler of Dubai passes away