Youtuber மாரிதாஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கு; 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தவெக அமைச்சர் மனுதாக்கல்..! - Seithipunal
Seithipunal


தீவிர வலதுசாரி ஆதரவாளரான பிரபல Youtuber மாரிதாஸ். அவ்வப்போது பெரும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். கடந்த 2021-ஆம் ஆண்டில், முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது, 'அடுத்த காஷ்மீராக தமிழகம் மாறுகிறதா' என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அப்போதைய திமுக அரசு, மாரிதாஸை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு மீது அவ்வப்போது பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான, குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், Youtuber மாரிதாஸ்-க்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான நடவடிக்கையை, அமைச்சர் பிரபு எடுத்துள்ளார். 

அதாவது, காரைக்குடி தொகுதியில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.பிரபு, தமிழக அமைச்சரவையில், கனிமவளத்துறை அமைச்சராக உள்ளார்.

அமைச்சர் டி.கே.பிரபு, Youtuber மாரிதாஸ்-க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதாவது ''தன்னை குறித்து அவதூறு பரப்பு வகையிலான கருத்துகளையும், ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுக்களையும், மாரிதாஸ் பரப்பி வருகிறார். எனவே, அவர் 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.'' என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், மாரிதாஸ் மட்டுமின்றி, அமெரிக்காவைச் சேர்ந்த X நிறுவனமும், கூகுள் நிறுவனமும், Youtube நிறுவனமும், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகள் தொடர்பாக, இந்த நிறுவனங்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK minister files defamation suit against YouTuber Maridhas


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->