உ.பி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக களமிறங்க முகமது ஷமி திட்டம்; மத்திய அமைச்சருமான ஜெயந்த் சௌத்ரியை சந்தித்த பின்னணி..? - Seithipunal
Seithipunal


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வெறும் 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக சாதனை படைத்தார். 

அடுத்து  அவர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 57 ரன்களுக்கு 07 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒருநாள் போட்டிகளில் ஒரு இந்தியரின் சிறந்த பந்துவீச்சாகும். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக (56 போட்டிகளில்) 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தற்போதும் முகமது ஷமி வைத்துள்ளார். 

கிரிக்கெட்டில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு 2023ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதை வழங்கி கௌரவித்தது.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய முகமது ஷமி, அதற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவே இல்லை. கடைசி சர்வதேச போட்டியை பொறுத்தவரை 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார்

இந்நிலையில் ஷமி ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சௌத்ரியை டெல்லியில் சந்தித்ததைத் தொடர்ந்து அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முகமது ஷமியோ அல்லது அவரது சகோதரர் ஹசீப்போ ஆர்எல்டி கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. முகமது ஷமி உ.பியின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்த தொகுதி கணிசமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டது ஆகும். இத்தொகுதி, தற்போது சமாஜ்வாதி கட்சியின் வசம் உள்ளது. இந்த நிலையில்தான் வரும் தேர்தலில் ஷமியைக் களமிறக்கி ஆர்எல்டி அத்தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆர்எல்டி ஆளும் பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The background behind Union Minister Jayant Chaudhary meeting Mohammed Shami


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->