மாநிலத் தேர்தலில் களமிறங்கும் கனிமொழி; தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பு..? சூடுபிடிக்கும் தேர்தல் களம்..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பெருமபாலான மக்கள் வைக்கும் பிரதான விமர்சனங்களில் ஒன்று, குடும்ப அரசியல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அதிகாரங்கள் ஒரே குடும்பத்தில் அதுவும் மன்னர் ஆட்சி முறையில் இருப்பதாக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுகவின் டெல்லி அரசியலை கவனித்து வருபவர் திமுகவின் குடுப்ப வாரிசு கனிமொழி, இவர் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மாநில அரசியில் கவனம் செலுத்த ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களில் நன்கு பரீட்சியமாக இருக்கும் கனிமொழி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் விருப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி எம்.பியாக இருப்பதால் அந்த மாவட்டத்தில் மக்களிடம் அதிகமாக நேரடியாக தொடர்பில் இருந்து வருவதால், அங்குள்ள ஒரு தொகுதியில் போட்டியிட பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

மாநிலத் தேர்தலில் கனிமொழி களமிறங்கினால் நிச்சயம் அமைச்சர் பதவி, அதுவும் அதிகாரமிக்க பதவி என்பது சாத்தியம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு மார்ச் 18-ஆம் தேதி நேர்காணல் நடைபெறுகிறது. இந்த நேர்காணலில் கனிமொழி கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Kanimozhi Contest from Thoothukudi in the 2026 Elections


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->