திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தனி நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை..! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தலைமைச்செயலாளர், மாவட்டச் ஆட்சியர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். 

அத்துடன், மலை உச்சியில் மலர் தூவி வழிபாடு நடத்த அனுமதிப்பதாகவும் அதற்கு மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் வந்தது. அப்போது, மலை உச்சியில் மலர் தூவி வழிபாடு நடத்த கோயில் நிர்வாகம் யோசிப்பது ஏன் என்றும் மிகவும் சாதாரணமான ஒன்றில், கோயில் நிர்வாகம் ஈகோ பார்ப்பது ஏன்..? பிடிவாதம் பிடிப்பது ஏன்..? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அத்துடன், ஒரு வழக்கிற்கு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்ப்படுவீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால், தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interim Stay on Single Judges Inquiry in Thiruparankundram Deepam Case


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->