''ஈரானுக்கு எதிரான நடவடிக்கையைத் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது;'' ட்ரம்ப் அரசின் நிர்வாக அதிகாரி ராஜினாமா..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநரான ஜோ கென்ட் ஈரான் உடனான மோதலைத் தன்னால் ஆதரிக்க முடியாது எனக் கூறி தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களில் நடத்தியது. தற்போது இது தீவிர போராக மாறியுள்ளது.

இதற்கு ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்திபதிலடி கொடுத்து வருகிறது. அதேசமயம், ஈரான் மீதான தாக்குதலையும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் சூழல் காரணமாக உலகம் முழுவதும் எரிவாயு, பொருளாதார தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கலைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. 

எனினும், இருதரப்பும் அதை கொஞ்சமும்செவியில் வாங்காது தங்களில் வலிமையை காட்ட போரை நிறுத்தாது, தொடர்ந்து மாறிமாறி தாக்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான போருக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாக அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநரான ஜோ கென்ட் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது; ஈரானுக்கு எதிரான நிர்வாகத்தின் இராணுவ நடவடிக்கையைத் தன்னால் மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவுக்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,இஸ்ரேலின் மேலதிக அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியுள்ளது என்பது தெளிவாகிறது என்றும், ஈரானில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதையும் நீங்கள் சிந்தித்துப் பார்ப்பீர்கள் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று ட்ரம்பிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும்,  துணிச்சலான நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இதுவே. நீங்கள் உங்கள் போக்கைத் திருப்பி, நமது தேசத்திற்கு ஒரு புதிய பாதையை வகுக்கலாம் அல்லது நம் தேசம் வீழ்ச்சியை நோக்கிச் செல்ல அனுமதிக்கலாம். எதுவென்றாலும் முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கையில் உள்ளது என்று ட்ரம்ப் அரசுக்கு எதிராக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump administration official resigns stating he cannot in good conscience support action against Iran


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->