உங்க ரீல் அறுந்துபோச்சு... திமுக மீது விஜய் சொன்ன குற்றச்சாட்டு என்ன?!
TVK Vijay Ariyalur election campaign
திருச்சியில் பிரசாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அரியலூரில் பிரச்சார வாகனத்தில் நின்று உரையாற்றினார். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்ற நிலையில், அவர் தனது உரையைத் தொடங்கினார்.
விஜய் தனது பேச்சில், “மதுரை மாநாட்டில் நான் உங்களை நேரில் சந்திக்க வருவதாக கூறியிருந்தேன். இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வந்துள்ளேன். நம்மை மேலிலும் கீழிலும் மோசமாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் பாசிச பாஜக அரசும், விஷமாக மாறிய திமுக அரசும் தான்.
பாஜக அரசே துரோகம் செய்கிறது என்று சொன்னால், திமுக அரசும் நம்மை நம்ப வைத்து துரோகம் செய்கிறது. நாம் எல்லோரும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்தோம். ஆனால், அவர்கள் 505 வாக்குறுதிகளை கொடுத்தும் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், எல்லாம் செய்து முடித்துவிட்டோம் எனக் கூறுவது மக்களை ஏமாற்றுவதாகும்.
‘ரீல் வேற, ரியாலிட்டி வேற’ என்று சொல்வது திமுகவின் மொழி. ஆனால் இன்று அவர்கள் சொல்வதெல்லாம் ரீல் தான். அதுவும் பாதியிலேயே அறுந்து போச்சு. நிறைவேறாத வாக்குறுதிகள், திட்டங்கள் என மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆனால், நம் ஆட்சியில் கல்வி, மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை அம்சங்களில் எந்த சமரசமும் இருக்காது,” எனக் கூறினார்.
English Summary
TVK Vijay Ariyalur election campaign