#BREAKING முக ஸ்டாலினை சந்தித்த தலைவர்! பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் கனவான 'திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம்' என்பதை நனவாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் செயல்படும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று தெரிவித்து இருந்தார்.

காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று அளித்த பேட்டியின் போது, ''மத்திய அரசின் திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கத் தயங்குகிறது. தமிழகத்தில் அடுத்து வருவது திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று ஆட்சியமைக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும்." என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கத் தயங்குகிறது. மற்ற கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mk stalin meet ks azhagiri


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->