சவுக்கு மீது மீண்டும் குண்டர் சட்டம்! அப்பட்டமான சட்டமீறல், அட்டூழியம் - கார்த்திக் சிதம்பரம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்கள் குறித்து அவதூறாக, அவமரியாதையாக பேசியதாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தேனியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்யும்போது, அவரின் உதவியாளர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்குகளில் தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளில் அடுத்தடுத்து ஜாமின் கிடைத்து வருகிறது.

மேலும், அவர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவதற்கு உண்டான வாய்ப்பு உள்ளதாக இருந்த நிலையில், மீண்டும் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

நிச்சயமாக இது அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கை என்றும், தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சவுக்கு மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான சட்டமீறல். அட்டூழியம். ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karti p Chidambaram Condemn for Savukku Shankar Goondas


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->