முன்னாள் அமைச்சர் வீட்டில் மரண ஓலம்.!! பதறிப்போன ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூக நலத்துறை அமைச்சர் என பல்வேறு பகுதிகளில் வகித்தவர் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சரோஜா. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சரோஜா அதிமுகவில் பல்வேறு பகுதிகளையும் வகித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவாக செயல்பட்டவர் தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் கணவர் பெருமாள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உப்பிலியாபுரம் திருமதி சரோஜா அவர்களுடைய கணவர் திரு P.K பெருமாள் அவர்கள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

பாசமிகு கணவரை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்பு சகோதரி திருமதி சரோஜா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் திரு பெருமாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கல் செய்திகள் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS condoles former minister Saroja husband death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->