ஓபிசி உள் ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் அன்புமணி கேட்ட கேள்வியும், மத்திய அரசின் பதிலும்!  - Seithipunal
Seithipunal


ஓபிசி உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக்காலம்  ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக 
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வினாவுக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க நீதியரசர் ரோகிணி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ரோகிணி ஆணையத்தின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் குறித்து வினா எழுப்பினார். அதற்கு எழுத்து  மூலம் பதிலளித்த மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் கிருஷ்ணன்பால் குர்ஜார், ’’ நீதிபதி ரோகிணி ஆணையம் அதற்கு வழங்கப்பட்ட பணிகளை நிறைவு செய்வதற்கான பதவிக்காலம் ஜூலை 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதன் பரிந்துரை விவரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dr Anbumani about Rohini commission OBC Reservation in Parliament


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->