சஞ்சு சாம்சனின் சாதனைக்கு மரியாதை...! - கேரள அரசு சிறப்பான வரவேற்பு விழா ஏற்பாடு - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இத்தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்த சஞ்சு சாம்சன், வாழ்வா-சாவா என்ற நிலையில் இருந்த மூன்று முக்கியப் போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதங்கள் விளாசி அசத்தினார்.

அவரது அதிரடி ஆட்டமும் நிதானமான அணுகுமுறையும் இந்தியாவிற்கு கோப்பையை பெற்றுத் தந்ததோடு, அவருக்கு ‘தொடர் நாயகன்’ விருதினையும் தேடித்தந்தது.

வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு தனது சொந்த ஊரான கேரளாவின் விழிஞ்சத்திற்கு வருகை தந்த சஞ்சு சாம்சனை, விமான நிலையத்தில் மாநில அமைச்சர் நேரில் சந்தித்து உற்சாகமாக வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து, நாளை கேரள அரசு சார்பில் அவருக்கு அதிகாரப்பூர்வ பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்று சஞ்சுவின் சாதனையை கௌரவிக்க உள்ளனர்.

மாநிலம் முழுவதும் சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள இந்த வரவேற்பு விழா பெரும் கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tribute Sanju Samson Achievement Kerala Government Organizes Grand Welcome Ceremony


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->