தேரோட்ட நாளில் தீராத துயரம்...! சாமிக்கு பூப்பறிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி அக்கா - தங்கை பலி...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு சாவடி பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அய்யனார் - ஜெயந்தி தம்பதியின் மகள்கள் ஹர்ஷினி (11) மற்றும் கயல் (8).

அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சாமிக்கு ஆற்றுப்படை பூஜைக்காக மலர் பறிக்கச் சென்ற சிறுமிகள் இருவரும், அங்குள்ள குளத்தில் எதிர்பாராதவிதமாக மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹர்ஷினி 6-ம் வகுப்பும், கயல் 3-ம் வகுப்பும் படித்து வந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காள் - தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தகவலறிந்து வந்த கோட்டக்குப்பம் காவலர்கள், சிறுமிகளின் உடல்களை மீட்டு கனகசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அங்காளம்மன் கோவில் தேரோட்டத் திருவிழா இன்று நடைபெறுவதால், சிறுமிகளின் உடல்களை நாளை (திங்கட்கிழமை) அடக்கம் செய்யப் போவதாக அவர்களது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

ஊரே திருவிழா கோலம் பூண்டுள்ள நிலையில், அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோன இந்த துயர சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Unending Tragedy Chariot Festival Day Sisters Drown Pond While Gathering Flowers Deity


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->