இளையராஜா பெயர் இடம்பெற்ற சர்ச்சைக் காட்சி நீக்கம்! இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!- பின்னணி என்ன?
Controversial scene featuring Ilayaraja name removed The black film crew apologized to Ilayaraja What the background
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவை குறிக்கும் வகையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தக் காட்சியை நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, யோகி பாபு, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், சில வெளியீட்டு சிக்கல்களால் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல் தாமதமானது. ஆரம்பத்தில் மே 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளிலிருந்தே ‘கருப்பு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மீண்டும் முழுமையான மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் இடைவேளைக்கு முன்பாக வரும் ஒரு காட்சியில், ‘அலை ஓசை’ திரைப்படத்தின் “போராடடா” பாடல் ஒலிக்கும் நிலையில், அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவை குறிக்கும் வகையிலான வசனம் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இசைஞானியின் பெயரை தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்:“இசைஞானி இளையராஜா அவர்களை எந்த வகையிலும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை. கதையின் ஓட்டத்திற்காக மட்டுமே அந்த காட்சி இடம்பெற்றது. அதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக எங்களின் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ‘கருப்பு’ திரைப்படத்தைச் சுற்றியிருந்த புதிய சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
English Summary
Controversial scene featuring Ilayaraja name removed The black film crew apologized to Ilayaraja What the background