மகளிருக்கு மாதம் ரூ.2500 எப்போது? 2 மாதத்தில் அப்டேட்!ரேசன் கார்டில் கை வைத்த விஜய்! பரபரவென மீண்டும் தொடங்கிய வேலை!
When will women get Rs 2500 per month Update in 2 months Vijay gets his hands on a ration card Work has resumed with great fanfare
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்ப அட்டை சேவைகள், கடந்த மே 15ஆம் தேதி முதல் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் புதிய குடும்ப அட்டை பெற காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் தற்போது 34,792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பல்வேறு அரசு நலத்திட்ட பயன்களை பெற்று வருகின்றனர்.
மகளிர் உரிமைத்தொகை, இலவச அரிசி, மானிய பொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு குடும்ப அட்டை முக்கிய ஆவணமாக இருப்பதால், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.
குறிப்பாக:
-
திருமணமான பெண்கள் தனியாக குடும்ப அட்டை பெறுவது
-
குடும்ப பிரிவுகள் அதிகரித்தல்
-
தனித்தனியாக நலத்திட்ட பயன் பெற விருப்பம்
-
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
போன்ற காரணங்களால், 2023 முதல் 2024 ஜூலை வரை மட்டும் சுமார் 8 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், புதிய குடும்ப அட்டை தொடர்பான அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.
இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்ய தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கீழ்க்கண்ட சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது:
இதனால் திருமணம், இடமாற்றம், குடும்ப பிரிவு போன்ற காரணங்களால் காத்திருந்த மக்களுக்கு இது முக்கிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை ரூ.1000 இலிருந்து ரூ.2500 ஆக உயர்த்துவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
தற்போது பழைய பயனாளிகளுக்கு ரூ.1000 தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய குடும்ப அட்டை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகே ரூ.2500 திட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான முழுமையான தரவுகள் தயாரிக்கப்பட்ட பிறகு, புதிய அரசாணை மூலம் ரூ.2500 உதவித்தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால், புதிய குடும்ப அட்டை சேவைகள் மீண்டும் தொடங்கியிருப்பது, எதிர்கால நலத்திட்டங்களுக்கும் முக்கிய அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
English Summary
When will women get Rs 2500 per month Update in 2 months Vijay gets his hands on a ration card Work has resumed with great fanfare