கல்வீச்சு அமைச்சர்., இந்திய வரலாற்றில் இப்படி ஒரு.., திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்ய சென்ற  பால்வளத்துறை அமைச்சர், திமுக தொண்டர் மீது மண் கட்டியை எடுத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சென்றுள்ளார். 

ஆய்வு சென்ற இடத்தில் அமைச்சர் நாசர் உட்கார நாற்காலி எடுத்துவதற்கு கால தாமதமானதால் கடுப்பாகி, திமுக தொண்டர் மீது மண் கட்டி எடுத்து அமைச்சர் நாசர் வீசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"சீக்கிரம் நாற்காலியில் எடுத்து வரவில்லை" என்று அமைச்சர் ஆவேசமாக மண் கட்டியை தூக்கி எறியும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அன்னமலை தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்திய வரலாற்றில், ஒரு அரசு அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா?

திமுக அமைச்சர் நாசர் விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகின்றார்.

கண்ணியம் இல்லை, நாகரீகம் இல்லை & அடிமைகளைப் போல நடத்துவது! இதுதான் திமுக." என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annaamalai say about nasar video


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->