அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்! - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, 

மக்களிடம் நாடகமாடும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தேர்தலின்போது 525 வாக்குறுதி அளித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் தவறான தகவல் பரப்பும் திமுகவுக்கு.

நீட் விவகாரத்தில் இனியும் ஏமாற்றாமல் திமுக தலைவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம்.
மக்களின் கோபத்தை மறைக்க கல்விக்கொள்ளை, மொழிக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, மாநில சுயாட்சி என்று திமுக நாடகம் என தீர்மானம்.

நீர் மேலாண்மையை முறையாக பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு அனுமதி பெற்றுத்தந்த இபிஎஸ் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி கூறி தீர்மானம்.

அதிமுக என்றென்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என உறுதி அளித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரி முதல் குப்பை வரி வரை உயர்த்திய திமுக அரசுக்கு கண்டன தீர்மானம்.
பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்ட இபிஎஸ்க்கு பாராட்டு என தீர்மானம்.

சமூக விரோத செயல்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் என தீர்மானம்.
மக்கள் நலன்களை புறந்தள்ளிவிட்டு சுய விளம்பர ஆட்சி, போட்டோ ஷூட் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம் என தீர்மானம்.

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம், பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என தீர்மானம்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று என மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK executive committee meeting 16 resolution passed 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->