புதிய போப் தேர்வுக்கு தயாரான வாடிகன்: சிஸ்டைன் சேப்பலில் புகைபோக்கி பொருத்தம்..! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88-வது வயதில் இத்தாலியின் வாடிகன் சிட்டியில் ஏப்.,21-ஆம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது.

போப் பிரான்சிஸ் காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை தொடங்கியுள்ளது.இந்த புதிய போப்பை தேர்வு செய்யும் பணி வரும் 07-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை உலகம் அறியும் புகைபோக்கி பொருத்தப்பட்டுள்ளது. போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில் 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர். அவர்கள் ஒன்று கூடி ரகசியமாக நடத்தும் ஓட்டெடுப்பில், 89 கார்டினல்களின் ஆதரவை பெறுபவர், அடுத்த போப் ஆக தேர்வு செய்யப்படுவார்.

அதன் பின்னர் புகைபோக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியேறும்படி சிறப்பு ரசாயனங்களைப் பயன்படுத்தி காகித வாக்குச் சீட்டுகளை ஒரு அதிகாரி எரிக்கும் போது, ​​ஒரு போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் அறியும். பின்னர் புதிய போப் தோன்றி சதுக்கத்தில் உள்ள கூட்டத்தினருக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்குவார். ஆனால், அன்றைய தினம் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அந்த புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறும்.

இந்நிலையில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை அறிவிக்கும் புகைபோக்கியை தூய்மைப்படுத்தி தீயணைப்பு வீரர்கள் சிஸ்டைன் சேப்பலில் பொருத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vatican prepares for the election of a new pope chimney fitting in the sistine chapel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->