அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் பங்கேற்க அனுமதி: பிரதமர் அறிவிப்பு..!
Prime Minister announces that private companies have been allowed to participate in the nuclear energy sector
இந்தியா பிரிட்டன் சிஇஓ கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது இந்தியாவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தனியார் துறைக்காக அணுசக்தி துறையை திறந்து விட்டுள்ளோம். இது இரு நாட்டு ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி புது உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் இந்த வளர்ச்சி பயணத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம் எனவும் அறிவித்துள்ளார். மேலும், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படுகிறதாகவும், 2020க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்தியாவும், பிரிட்டனும் சேர்ந்து சர்வதேச அளவில் புதிய சாதனைகளை படைக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தில் நிறைய சீர்திருத்தங்களை செய்துள்ளதாகவும், சிக்கல்களை குறைத்து எளிதாக தொழில் செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் கொண்டுவந்துள்ளதோடு, இது நடுத்தர வர்க்கம் மற்றும் சிறுகுறு தொழில்துறையினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
English Summary
Prime Minister announces that private companies have been allowed to participate in the nuclear energy sector