நாளை 8 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..சென்னை மாநகராட்சி அழைப்பு!
Tomorrow Stalins planning camp with you in 8 wards Chennai Corporations invitation
சென்னையில் நாளை 8 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் என்றும் பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முகாமை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார் . இதையடுத்து இந்த முகாம்கள் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் முதல் அக்டோபர் மாதம் வரை 15 மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தலா 2 முகாம்கள் வீதம் 200 வார்டுகளிலும் நடைபெற்றுவருகிற்து.மொத்தம் 400 முகாம்கள் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை தண்டையார்பேட்டை மண்டலம் , வார்டு-45ல் வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-77ல் புளியந்தோப்பு, பேசின் யானை கவுனி கேட் சாலையில் உள்ள சுந்தரபுரம் விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மண்டலம் , வார்டு-88ல் பாடி, டி.வி.எஸ். நகர் 2 வது தெருவில் உள்ள அன்னை மண்டபம், அண்ணாநகர் மண்டலம்,
வார்டு-105ல் அரும்பாக்கம், ரசாக் தோட்டம் பிரதான சாலையில் உள்ள முரளிகிருஷ்ணா திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-124ல் மயிலாப்பூர், ஆர்.கே. மட் சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-141ல் தியாகராய நகர், உஸ்மான் சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-154ல் இராமாபுரம், சாந்தி நகர் பிரதான சாலையில் உள்ள சாய் உதயம் மஹால், அடையாறு மண்டலம் . வார்டு-180ல் திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருமண மண்டபம் ஆகிய 8 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow Stalins planning camp with you in 8 wards Chennai Corporations invitation