ஜப்பானை முந்திய இந்தியா; திடக்கழிவுகளை கொண்டு சாலை சாலை கட்டுமானம்; நிதின் கட்கரி தகவல்..!
Nitin Gadkari informs about road construction using solid waste
திடக்கழிவுகளை பயன்படுத்தி சாலை கட்டுமான பணி தொடங்கும் என டில்லியில் வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அங்கு அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது: எந்தப் பொருளும் வீணாகக்கூடாது எனவும், எந்த நபரும் வீண் போகக்கூடாது எனவும் தெரெய்வித்துள்ளார். அத்துடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் தலைமைப் பண்பின் கொள்கையைப் பயன்படுத்தி, கழிவுகளை செல்வமாக மாற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, வரும், 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள், எந்தக் கழிவாக இருந்தாலும், அது திடக்கழிவாக இருந்தாலும் அதனை சாலை அமைக்க பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டில்லியில் மலை போல் குவிந்துள்ள கழிவுகளை பார்ப்பதற்கு அழகாக இல்லை. அதனால், 80 லட்சம் டன் கழிவைப் பிரித்து அதனை சாலை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது முக்கியமாகும். 2014-இல் உலகில் 07-வது மிகப்பெரிய ஆட்டோ மொபைல் தொழில்துறை நாடாக இந்தியா இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜப்பானை முந்தி 03-வது பெரிய நாடாக முன்னேறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் தொழில்துறை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலேயும், தற்போது, எரிபொருளுக்கு மாற்றாக பயோ எரிபொருள், மின்சார வாகனங்கள், எத்தனால், மெத்தனால், பயோ டீசல், எல்என்ஜி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மூலம் வழியைக் கண்டுபிடித்து வருகிறதாகவும், உலகில் உள்ள அனைத்து பிராண்ட் ஆட்டோ மொபைல் மையமாக இந்தியா மாறும் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Nitin Gadkari informs about road construction using solid waste